Header Ads Widget

Responsive Advertisement

Yaar Indha Saalai song lyrics


Movie : Thalaivaa
Music : G.V. Prakash Kumar
Singers: G.V.Prakash Kumar, Saindhavi
Lyrics: Na. Muthukumar






Powered by musicoftamil.blogspot.com

Download - Right click save link as


யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரனது வானிலே

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
என்னாகிரேன் என்று ஏதாகிரேன்
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
வைரம் போல பெணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன்காலடி
நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீல
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரனது வானிலே



Thalaivaa Songs lyrics
=> Tamil pasanga song lyrics
=> Thalapathy Thalapathy song lyrics
=> Sol Sol Sol Anbe song lyrics
=> Vangana vanakangana song lyrics

Post a Comment

0 Comments