Header Ads Widget

Responsive Advertisement

sakiyE - pachchai niRamE




song : sakiyE - pachchai niRam
Singers : Hariaharan
music : AR Rahman
Lyricist : vairamuththu
film : AlaipAyuthE






Powered by http://musicoftamil.blogspot.com
Download(right click save link as)


சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடா பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம் எல்லா சிவப்பும் உந்தன் கோபம்

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...
மழையில் முளையும் தும்பை நிறமே...
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையின் துளியும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே



Alaipayuthey Song Lyrics

Post a Comment

0 Comments