Song : Oru kaditham ezhuthinen
Movie : Deva
Music : Deva
Singer : SPB
Download - Right click save link as
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி..
ப்ளீஸ்..
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி..
(ஒரு கடிதம்..)
கண்ணே உன் காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின்மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல்தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழைக் கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி என்னைக் காதலி..
காதலி என்னைக் காதலி..
(ஒரு கடிதம்..)
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீயின்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி.. மை டார்லிங்..
என்னை காதலி.. ப்லீஸ்
காதலி என்னைக் காதலி
(ஒரு கடிதம்..)
0 Comments