Header Ads Widget

Responsive Advertisement

Konja Naal Poru - Aasai



Movie: Aasai ஆசை
Music: Deva
Lyrics:
Singers: Hariharan, Sujatha






கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா

கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்

தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்



நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்குயில

தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல

வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ

ஓடிப்போனா உச்சிமலக் காத்தா

சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா

சொல்லப்போனா பேரழகி சொக்கத்தங்கம் போலிருப்பா

வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா



என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி

கட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி

சிந்தனையில் வந்துவந்து போறா அவ

சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா

என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா

எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா

வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

Post a Comment

0 Comments